சிப்பிப்பாரை நாய்
Chippiparai Dogs

chippiparai dogs

சிப்பிப்பாரை நாய் :
தமிழ்நாட்டின் நாய் வகையை சேர்ந்தது. சலூகி அல்லது ஸ்லோகி என்ற ஒரு வம்சாவளியாக கருதப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவு நாய், இன்று பெரியார் ஏரிக்கு அருகே இது காணப்படுகிறது. காட்டுப்பன்றி, மான் மற்றும் முயல் ஆகியவற்றை வேட்டையாடுவதற்கு இது முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டிற்கு பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிப்பிப்பாறை என்ற இடத்தில ராஜ குடும்பங்களால் வளர்க்க பட்டது. திருநெல்வேலி மற்றும் மதுரை ராஜ குடும்பங்களால் ராயல்டி மற்றும் கௌரவத்திற்கான அடையாளமாகவே இருந்தது.

தோற்றம் :
இவை வழக்கமாக இளமஞ்சள் நிறத்தில் செம்மண்ணிறத்தவையாகவும், மிக லேசான வெள்ளி, சாம்பல் நிறக் கோடுகளுடன் மற்றும் நீண்ட வளைவான வாலுடன் இருக்கும்.  இவை  25 அங்குலம் அல்லது 63.5 செ.மீ தோள் உயரம் கொண்டவை. அண்மைய கணக்கீட்டின்படி ஆண் நாய்கள் தோராயமாக 63.0 செமீ, பெண் நாய்கள் 56.0 செமீ தோள் உயரம் உடையவையாக உள்ளன. இதன் உடல் முடிகள் குட்டையானவையாக பளபளப்பானவையாக உள்ளது இதனால் இவை வெப்பத்தைத் தாங்க உதவியாக உள்ளன. இதன் முடியின் நீளம் குறைவாக உள்ளதால் இவை தெள்ளுப் பூச்சிகளை எளிதாக புரண்டு படுத்து உதிர்க்கின்றன. இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஸ்லோகி, அல்லது ராம்பூர் வேட்டை நாய்களை மிகவும் ஒத்ததாக இருக்கிறது.

Chippiparai Dogs :
Chippiparai Dogs was added to the dog type of Tamil Nadu. Is considered a descendant of Salogi or Slogi. It is a medium-sized dog and is located near Periyar Lake today. It is primarily used for hunting wild boar, deer and rabbit. It is also used to protect the house. It was raised by royal families at Sippiparai in Virudhunagar district, Tamil Nadu. Tirunelveli and Madurai were a symbol of royalty and honor by the royal families.

Appearance :
Chippiparai Dogs are usually light brown, with very light silver, gray stripes and long curved tail. They are 25 inches or 63.5 cm in height. According to a recent estimate, male dogs are approximately 63.0 cm and female dogs are 56.0 cm in height. Its body hairs are shiny, so they help to bear the heat. Because the length of the hair is low, these can easily flush the powdery mites. The overall look is quite similar to the Slogy or Rampur hunting dogs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *