கன்னி நாய்
Kanni Dog

tamil nadu kanni dog breeds

கன்னி நாய் :
தமிழ்நாட்டை  பூர்விகமாக கொண்ட ஒரு பழமையான நாய் இனம் . இவை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்துருகிறது.நாய்களின் வகைப்பாட்டில் இவை சைட்ஹவுண்ட் (Sighthound) வகையை சார்ந்தவை.இவை வேட்டை நாய், ஜாதி நாய் என பொது பெயரில் அழைப்பவர்களும் உண்டு. இவை பொதுவாக முயல் போன்ற சிறு காட்டு விலங்குகளை வேட்டையாட ஜமீன்தார்கள், நிலக்கிழார்கள், வேட்டைக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு நாய் இனம் ஆகும்.

தோற்றம் :
கன்னி நாய்கள் சராசரியாக 25.5 அங்குலம் வளரக்கூடியவை. பெண் நாய்களும் ஏறக்குறைய ஆண் நாய் போல் தோற்றமளிக்கும். இதன் எடை சுமார் 16 இருந்து 25 கிலோ வரை இருக்கும். இவை பல நிறங்களில் காணப்படுகிறது. அந்தந்த இனவழிக்கென்று குறிப்பிட்ட நிறங்கள் உள்ளன. அதே போல் ஒவ்வொரு இனவழி நாய்களின் தோற்றத்திலும் சிறிது வேற்றுமை காணப்படுகிறது. பொதுவாக இவற்றின் முடியானது தலை, கழுத்து, உடம்பு, வால் என உடம்பு முழுவதும் குறுகிய ரோமக்கட்டுடன் காணப்படும். வாலானது நீளமாக வால் முடிச்சுகள் கணு கணுவாக தெரியும் அளவுக்கு மெல்லியதாக சாட்டை போன்று காணப்படும் .

குணம் :
கன்னி நாய் கூச்ச சுபாவம் இவை அமைதியானவை தொல்லை தரும்வகையில் குரைக்காதவை. கன்னி நாய்கள் மிகவும் விசுவாசமாக இருப்பவை. பயிற்சியளிக்க எளிதானவையாக இருக்கும், ஆனால் அவை எப்போதும் வேட்டையின் போது தனித்து இயங்க நினைப்பவை. இவை மிகவும் சுறுசுறுப்பானவையாகவும், மற்றும் வலுவான கால்களைக் கொண்டதாக உள்ளதால் மான்களை வேட்டையாட பயன்படுத்தப்படுகின்றன.

Kanni Dog :
Virgin dog “(Kanni Dog) is an ancient dog breed in Tamil Nadu. It has been around 2000 years ago. It belongs to the Sighthound category. They are also known as hunting dogs and cats. These are usually a dog race used by zamindars, landlords, hunters to hunt for small wild animals such as rabbit.

Appearance :
Virgin dogs can grow in average 25.5 inches. Woman’s dogs are almost like a male dog. The weight is about 16 to 25 kg. These are found in many colors. There are specific colors for their respective ethnic groups. Similarly, there is little difference in the appearance of every ethnic dog. Their hair is usually found in the head, neck, body, and tail with a narrow romance throughout the body. The tail is long waist to the tip of the nodules as the naked eye.

Heal :
The virgin nature of the virgin dogs are quiet and are not bleeding. Virgin dogs are very loyal. They are easy to train, but they always seem to be running separately during the hunt. They are very agile and have strong legs and are used to hunt the deer.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *